நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை திருமணிமுத்தாற்று வெள்ளம் சூழ்ந்ததால் பரமத்தியில் உள்ள இலங்கை அகதிகள் முகாம், காந்தி நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது.
வெள்ள நீருடன் கழிவு நீர் மற்றும் குப்பைகள் கலந்து வந்ததால் குடியிருப்புவாசிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
15க்கும் மேற்பட்ட தரைப்பாலங்கள் மூழ்கிய நிலையில், தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.