சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வேலாயுதகரடு அருகே பிரதான சாலையை தண்ணீர் மூழ்கடித்து செல்வதால் பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கொங்கணாபுரத்திலிருந்து புதுப்பாளையம், சமுத்திரம், கோண சமுத்திரம், வேம்பனேரி உள்ளிட்ட கிராமங்களுக்கு சுமார் 10 கிலோ மீட்டர் வரை சுற்றி செல்லும் நிலையில், பொதுமக்கள் செல்வதை தடுக்க கயிறு கட்டி வைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.