திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கொடநகர் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீருடன் கழிவு நீரும் கலந்து துர்நாற்றம் வீசுவதால் அதனை அகற்றவும், மழைநீர் வடிகால்களை அமைக்கவும் வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் செய்யாறு புறவழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறையினர் உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.