சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை ஆனைமடுவு அணைக்கு செல்லும் காட்டாற்று வெள்ளத்தால் சந்துமலை, நெய்யமலை, கிழக்காடு, புங்கமடுவு உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு குறைந்தது இரண்டு முறையாவது இதுபோன்று நேர்வதால் அத்தியாவசிய தேவைகள் மற்றும் மருத்துவத்திற்காக செல்வதில் சிரமம் ஏற்படுவதாகவும், அப்பகுதியில் பாலம் அமைத்து தர வேண்டும் என மலைக்கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.