மதுரையில் தங்கநகை வியாபாரியைக் கடத்திச் சென்று 2 கிலோ நகைகளைப் பறித்த கும்பலில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாலசுப்பிரமணியம் என்ற அந்த வியாபாரி கடந்த மாதம் 23ஆம் தேதி சென்னையிலிருந்து நகைகளை வாங்கிக் கொண்டு ரயிலில் மதுரை சென்ற நிலையில் கடத்தப்பட்டார்.
இது தொடர்பாக பாக்கியராஜ், மணிகண்டன், முத்துலிங்கம் ஆகியோரை கைது செய்துள்ள போலீசார், கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட சென்னையைச் சேர்ந்த நபர் உட்பட இருவரைத் தேடி வருகின்றனர்.