புதுச்சேரி வில்லியனூர் அருகே வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட மூதாட்டியை காவல் ஆய்வாளர் ஒருவர் தனது தோளில் தூக்கிச் சென்று காப்பாற்றிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
சேறும் சகதியுமாகக் காட்சியளிக்கும் அந்த இடத்தில் ஷூ அணியாத வெற்றுக் காலுடன் சென்று அவர் மூதாட்டியை மீட்டு வந்துள்ளார்.
கோர்க்காடு கிராமத்தில் உள்ள சரோன் சொசைட்டி முதியோர் இல்லத்தில் 11 முதியவர்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்த நிலையில், சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து படகுகளில் சென்று அவர்களை மீட்டனர்.