புயலாக இருந்த பெஞ்சல் டிசம்பர் 3 ஆம் தேதி மேலும் வலுவிழந்து அரபிக்கடலுக்கு செல்லக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
டிசம்பர் 1 ஆம் தேதி காலை வட தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் நிலவிய பெஞ்சல் புயல், மதியம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறைந்ததாக அந்த மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
1 ஆம் தேதி மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 2 ஆம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் வலு குறைந்து, வட தமிழக உள் பகுதிகளில் நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.