பெஞ்சல் புயல் கனமழையால் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சமத்துவபுரம் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
அங்கு வசித்தவர்கள் பாதுகாப்பு கருதி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அனைத்தையும் இழந்து தவிக்கும் தங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.