நாகை மாவட்டம் நாகூரில் உள்ள உலகப்புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் 468-வது ஆண்டு கந்தூரி விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி, தர்காவின் மினராக்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
கந்தூரி விழாவுக்கான கொடி ஊர்வலம் துவங்கும் நாகப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் சார்பில் நடைபெற்ற வானவேடிக்கை நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் 11-ஆம் தேதி நடைபெற உள்ளது.