நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ஒரே நாளில் 30க்கும் மேற்பட்டோர் தெருநாய்க்கடிக்கு உள்ளாகி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
பெரியார் நகர், ஆவரங்காடு ,காந்திபுரம், நான்காவது கிராஸ், ஆர்.எஸ் ரோடு சாலை என பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 8 வயது சிறுவன் முதல், முதியவர்கள் வரை தெருநாய்கள் கடித்துக் குதறியுள்ளன. நகராட்சி நிர்வாகத்தினர் நீண்ட போராட்டத்துக்குப் பின் ஒரு சில நாய்களைப் பிடித்தனர்.