அதிகனமழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
திண்டிவனம் பகுதியில் காவேரிப்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறிய உபரி நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அவர், விழுப்புரம் பேருந்து நிலையத்திலும் ஆய்வு செய்தார்.
பின்னர் பேட்டியளித்த அவர், சேத விவரங்களை கணக்கிட்டபின் உரிய நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்.
முன்னதாக, மாமல்லபுரத்தில் நிவாரண முகாமில் உள்ள இருளர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அரிசி, பாய், போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் உதயநிதி வழங்கினார்.