திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை, போளூர் சுற்றுவட்டார பகுதியில் இரண்டு நாட்களாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் ஜமுனாமரத்தூர், படவேடு, சேத்துப்பட்டு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அங்குள்ள மஞ்சள் ஆற்றின் கரை உடைந்து அத்திமூர் வீர கோவில் பகுதியில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது.
பாதிக்கப்பட்ட கிராம மக்கள் ஜேசிபி இயந்திரத்தை வைத்து கரைகளை அடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.