சிவகங்கை மவாட்டம் திருப்பத்தூர் அருகே மின்சாரம் தாக்கி மாடு உயிரிழந்த நிலையில், அதனை காப்பாற்ற முயன்ற பெண்ணும் உயிரிழந்தார்.
சில்லாம்பட்டியைச் சேர்ந்த மாணிக்கவள்ளி என்பவரின் பசு மாட்டின் மின் வயர் அறுந்து விழுந்ததை அடுத்து, அந்த வயரை தூக்கி அவர் எறிந்த போது மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது.
குரங்குகளின் தொல்லையால்தான் மின் வயர் அறுந்து விழுந்ததாக சொல்லப்படுகிறது. அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.