தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்தமாதம் 9ஆம் தேதி தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டப்பேரவை கூடிய பிறகு நடைபெறும் அலுவல் ஆய்வு கூட்டத்திலேயே எத்தனை நாட்கள் கூட்டத்தொடரை நடத்துவது என்பது முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ளாட்சி நிர்வாகிகள் பதவிகாலம் முடியவுள்ள நிலையில், தேர்தல் நடத்துவது தொடர்பாகவும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகளை நியமனம் செய்வது தொடர்பாகவும் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.