மதுரை சந்தப்பேட்டையில் நடைபெற்ற அ.தி.மு.க கள ஆய்வுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செம்மலை , செல்லூர் ராஜூ முன்னிலையிலேயே அ.தி.மு.கவினர் கைகலப்பில் ஈடுபட்டனர்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படும் நபர் ஒருவர் மேடையில் ஏறி பேச முயன்றபோது, ஒருதரப்பினர் அவரை தாக்கி கீழே இறக்கியதாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி இருதரப்பைச் சேர்ந்தவர்கள் முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலே கைகலப்பில் ஈடுபட்டனர்.