சேலம் மாவட்டம், ஆத்தூர் சிறையில் கைதிகளுக்குள் ஏற்பட்ட தகராறை தடுக்கத் தவறியதாக இரவுப் பணியில் இருந்த முதல் நிலை தலைமை காவலர் செந்தில்குமார் மற்றும் இரண்டாம் நிலை காவலர் ராஜவர்மன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
செவ்வாய் கிழமை இரவு சதுரங்கம் விளையாடி கொண்டிருந்த போது ஐந்து கைதிகள் சேர்ந்து யோகேஸ்வரன் என்ற கைதியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
யோகேஸ்வரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஐந்து கைதிகளையும், சேலம் மத்திய சிறைக்கு மாற்றி, மூன்று மாத காலத்திற்கு அவர்களை உறவினர்கள் பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.