இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகுகள் மற்றும் பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் இணைந்து பாம்பன் சாலை பாலத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மீனவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அங்கிருந்து கலைந்து சென்ற மீனவர்கள் சாலை பாலத்திற்கு அருகே உள்ள பாம்பன் வடக்கு கடல் பகுதியில் இறங்கி போராட்டம் நடத்த முயன்ற நிலையில், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
மீனவர்களின் போராட்டம் காரணமாக, பாம்பன் சாலை பாலம் மற்றும் பாம்பன் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.