தேனி மாவட்டம்,போடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த மழைகாரணமாக காற்றோட்டமாய் இருப்பு வைக்கப்பட்ட சின்ன வெங்காயங்கள் முளைத்து அழுகும் நிலை ஏற்பட்டதால், கடும் விலைவீழ்ச்சி ஏற்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர் .
100க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் பயிரிடப்பட்ட வெங்காயம் காற்றோட்டமான முறையில் வடிவமைக்கப்பட்ட குடில்களில் காயவைப்பது வழக்கமான நிலையில் மழை காரணமாக ஈரவாடை வீசுவதால் உடனடியாக விற்க நேரிட்டதாகத் தெரிவித்தனர்