திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் ஊராட்சியில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் முன்விரோதம் காரணமாக கடந்த ஒன்றாம் தேதி 2 இளைஞர்களை அதே முகாமைச் சேர்ந்த 2 பேர் பட்டா கத்தி, கடப்பாரையால் தாக்கும் காட்சி வெளியாகி உள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான பலத்த காயங்களுடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தப்பியோடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.