செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

காவலர் மண்டை உடைப்பு குடிகார புரூஸ்லீக்கு தரமான மாவுக்கட்டு..! கையை தொட்டிலில் போட்டு விட்டனர்..

Nov 06, 2024 07:26:23 PM

கையை தொட்டிலில் போட்டப்படி வலியுடன் வருகிறாரே இவர் தான்... புரூஸ்லீ போல கையில் நஞ்சக்குவை சுற்றி இரு காவலர்களின் மண்டையை உடைத்த வழக்கில், போலீசாரால் மாவுகட்டு போட்டு விடப்பட்ட போதை வீரன் விஸ்வநாதன்..!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள குமராட்சி காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் ஜெயராமன் மற்றும் முதுநிலை காவலர் தேவநாதன் ஆகிய இருவரும் புதன்கிழமை அதிகாலை குமராட்சி அருகே வாகன சோதனை செய்து கொண்டிருந்தார்.

அப்பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி விசாரணை செய்த பொழுது குடிபோதையில் இருந்த அவர் இடுப்பில் கத்தியை சொருகி வைத்திருந்தார். அவரை வீடியோ எடுத்தபடியே போலீசார் அவரிடம் இருந்து கத்தியை பறிக்க முயன்றதாக கூறப்படுகின்றது. வீடியோ எடுப்பதை நிறுத்தச்சொன்ன போதை ஆசாமி போலீசாரை முதலில் கத்தியால் தாக்கி உள்ளான். இருந்தாலும் இருவரும் சேர்ந்து அவனை செல்ல விடாமல் தடுத்ததால், தான் மறைத்து வைத்திருந்த நஞ்சக் என்ற கராத்தே கருவியை எடுத்து சரமாரியாக சுற்றி உள்ளான். இதில் அவனை மடக்கிப்பிடிக்க முயன்ற ஒரு காவலரின் மண்டை உடைந்தது.

போலீசாரை தாக்கிவிட்டு தப்பிச்சென்ற ஆசாமியை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தனிப்படை அமைத்து கடலூர் போலீசார் தேடினர். புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் பதுங்கி இருந்த போதை ஆசாமி விஸ்வநாதனை சுற்றிவளைத்தனர். போலீசாரிடம் சிக்காமல் இருக்க எகிறி குதித்து தப்பி ஓடிய போது வழுக்கி விழுந்ததில் விஸ்வநாதனின் வலது கை எலும்பு முறிந்ததாக தெரிவித்த போலீசார், அவனை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மாவுக்கட்டு போட்டு விட்டனர். அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பினர்

அவனிடம் இருந்து தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியும் நஞ்சக் கராத்தே கருவியும் கைப்பற்றப்பட்டது. இரு காவலர்களும் தன்னை வீடியோ எடுத்து வெறுப்பேற்றியதால் தாக்கியதாக விஸ்வநாதன் போலீசாரிடம் தெரிவித்துள்ளான்.


Advertisement
கடப்பா கல் சரிந்து விழுந்ததில் 4 வயது சிறுவன் உயிரிழப்பு.!
நகை பட்டறையில் திருட முயன்ற முதியவருக்கு போலீசார் வலைவீச்சு..!
ஆவின் பாலில் தண்ணீர் கலந்து மோசடி..பால் வேனை சிறைபிடித்த மக்கள்..!
மதுபோதையில் தகராறு செய்து வந்த மகனை கொன்ற தந்தை - போலீசார் விசாரணை
திடீரென மாற்றம் செய்யப்பட்ட கால்நடை மருத்துவமனை..பொதுமக்கள் மாடுகளுடன் சாலை மறியல்.!
ஆயுதத்தை எடுத்து தருவதாக கூறி குற்றவாளி தப்பியோட முயற்சி - தண்டவாளத்தில் வழுக்கி விழுந்து எலும்பு முறிவு..!
கோவையில் , ரூ.300 கோடியில் நூலகம், அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்.!
சிகிச்சைக்கு அழைத்துச் சென்றவர் உயிரிழப்பு - உறவினர்கள் சாலை மறியல்..!
மாற்றுப் பயிர் சாகுபடிக்கு மகத்தான சாய்ஸ் டிராகன் பழ சாகுபடியில் லாபமீட்டும் விவசாயிகள் மாற்று சாகுபடிக்கு ஏற்ற பயிர்!
திருச்செந்தூர் முருகன் கோவில் கந்தசஷ்டி தங்கத்தேர்பவனி விழா

Advertisement
Posted Nov 06, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

மீண்டும் அதிபராகிறார் டொனால்ட் டிரம்ப்.. கமலாவுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கர்கள்..

Posted Nov 06, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாற்றுப் பயிர் சாகுபடிக்கு மகத்தான சாய்ஸ் டிராகன் பழ சாகுபடியில் லாபமீட்டும் விவசாயிகள் மாற்று சாகுபடிக்கு ஏற்ற பயிர்!

Posted Nov 06, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காட்டுக்குள் பதுங்கி பெண்கள் வேட்டை காமுகன் கால் உடைந்தது..! சீரியல் ரேப்பிஸ்ட் சிக்கியது எப்படி ?

Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தேனீக்கள் வளர்ப்பது இவ்வளவு சுலபமா..? மாதம் ரூ.50 ஆயிரம் லாபம்..! ஒரு நாள் பயிற்சி தர்ராங்க..

Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கை கொடுக்கும் காளான் வளர்ப்பு.. வாய்ப்பை வழங்கும் வேளாண் பல்கலை..


Advertisement