வேளச்சேரியில் தொழில் போட்டி காரணமாக துணிக்கடை உரிமையாளரை காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற வழக்கில் சக துணிக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
விஜயநகர் பேருந்து நிலையம் அருகில் துணிக்கடை நடத்தி வரும் செபஸ்டினுக்கும், அருகில் கடை நடத்தி வரும் சிவகுமார் என்பவருக்கும் போட்டி இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் தீபாவளி விற்பனை மந்தமானதால் ஆத்திரத்தில் இருந்த சிவகுமார் ஞாயிறு இரவு மதுபோதையில் செபஸ்டினிடம் வாக்குவாதம் செய்ததுடன் அவர் மீது காரை ஏற்ற முயன்றார்.
சுதாரித்துக்கொண்டு செபஸ்டின் நழுவிச் செல்ல, அவரது கடை மீது காரை வேகமாக மோதினார்.