பொள்ளாச்சி அருகே கோட்டூரில் எதிர் திசையில் தாறுமாறாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த தென்சங்கம்பாளையம் மகளிர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணவேணி பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.
அங்கலக்குறிச்சியில் வசிக்கும் கிருஷ்ணவேணி நேற்று மாலை பணிக்கு சென்று கொண்டிருந்தபோது சிவக்குமார் என்பவரின் இருசக்கர வாகனம் மோதியதாக கூறப்படுகிறது. காயமடைந்த சிவக்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கோட்டூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த கிருஷ்ணவேணியின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.