ஈரோடு மாவட்டத்தில் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி மிரட்டி பணம் பறிக்கும் கும்பலிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
சமூக வலைதளங்களில் இளம் பெண்கள் பகிரும் படங்களை பயன்படுத்தியும், வீடியோ கால் சேவை என கூறி வாட்ஸ் ஆப் வீடியோ கால் செய்பவர்களை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து மிரட்டியும் மோசடி கும்பல் பணப்பறிப்பில் ஈடுபடுவதாக போலீசார் கூறியுள்ளனர்.
இதே போல் வட மாநிலத்தில் இருந்து காவல் உயரதிகாரிகள் பேசுவதாகவும், குடும்ப நபர்களின் பெயரை கூறி போதைப்பொருள், கடத்தல் என எதாவது ஓரு வழக்கில் சிக்கி இருப்பதாக மிரட்டி பணம் பறிக்கப்படும் சம்பவங்கள் நடைபெறுவதாகவும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
இது போன்ற பிரச்சினைகளில் சிக்குபவர்கள் சைபர் கிரைம் போலீசாரின் இணையதளத்திலும், 1930 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம் என அறிவுறுத்தினர்.