செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

நீட் தேர்வில் ஜெயிக்கனுமில்ல.. மாணவர்களை அடித்த பயிற்சியாளர்..! மாணவி மீது செருப்பு வீச்சு கொடுமை

Oct 18, 2024 06:16:27 PM

நெல்லையில் உள்ள ஜல் நீட் அகாடமியில் மாணவர்களை கம்பால் அடித்தும், மாணவி மீது செருப்பை தூக்கி வீசியும் பயிற்சியாளர் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகளுடன் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

நீட் தேர்வுக்காண பயிற்சி மையத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் காட்சிகள் தான் இவை..!

டாக்டர் ஆக வேண்டுமென்றால் நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் அதுவும் அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டுமென்றால் 580 மதிப்பெண்களுக்குக்கு மேல் எடுக்க வேண்டும் என்பதால் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை நீட் பயிற்சி மையத்துக்கு அனுப்பி படிக்க வைத்து வருகின்றனர். அந்தவகையில் நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே கேளராவை சேர்ந்த ஜலாலுதீன் அகமத் என்பவர் நீட் பயிற்சிமையம் ஒன்றை நடத்தி வருகின்றார். ஒவ்வொரு மாணவரிடமும் சராசரியாக 60 ஆயிரம் ரூபாயில் இருந்து 80 ஆயிரம் ரூபாய் வரை இந்த பயிற்சி மையத்தில் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.

கடந்த வருடம் இந்த பயிற்சி மையத்தில் படித்து நீட்டில் தேர்ச்சி பெற்றவர்களில் 18 பேருக்கு அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது. இதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலி மற்றும் கேரள மாநில மாணவர்களும் இங்கு ஏராளமாக பயிற்சி பெற்று வருகின்றனர்.

தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை பயிற்சி வகுப்புகள் நடக்கின்ற நிலையில் பயிற்சியாளர் ஜலாலுதீன் அகமத், சில மாணவர்களை வரிசையாக நிற்க விட்டு பிரம்பு கம்பால் அடிப்பது போல சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சி ஒன்று வெளியானது

அதே போல பயிறசியாளர் ஜலாலுதீன் அகமத், செருப்புகளை தூக்கி வந்து , இது யாருடையது என்று கேட்டு, சம்பந்தப்பட்ட மாணவியின் மீது செருப்புகளை தூக்கி வீசிய காட்சியும் வெளியானது

இந்த வீடியோ காட்சிகள் மற்றும் காயம் அடைந்தவர்களின் புகைப்படத்தின் அடிப்படையில் நெல்லை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி, சம்பந்தப்பட்ட பயிற்சியாளர் மீது மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவம் குறித்து 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சிசிடிவி காட்சி குறித்து பயிற்சிமையத்தில் விசாரித்த போது, சம்பவத்தன்று உணவு இடைவேளையின் போது சில மாணவர்கள் தூங்கியதாகவும், அதனை கண்டு ஆத்திரமடைந்த பயிற்சியாளர் கண்டித்ததாகவும் தெரிவித்தனர். மேலும் மையத்துக்கு வெளியே செருப்பை கழற்றி உரிய இடத்தில் வைக்காமல் , வாசலிலேயே விட்டு வந்ததால் , அந்த செருப்பை உரிய இடத்தில் வைக்க அறிவுறுத்தி தூக்கி வீசியதாகவும் விளக்கம அளித்தனர்.

 


Advertisement
அரசின் கல்விக் கட்டணத்தை விடுவிக்க ரூ.25,000 லஞ்சம் மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கைது
முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் காவல் நிலையத்தில் சிலைத் திருட்டு புகார்
மழை வெள்ள பாதிப்பிற்கு தி.மு.க., அ.தி.மு.க ஆட்சிகளே காரணம் - சீமான்
தூத்துக்குடி கள்ளச்சந்தையில் விற்பதற்காகக் கொண்டுவரப்பட்ட பயோ டீசல் பறிமுதல் - 2 பேர் கைது
மதுரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தாழ்தள பேருந்து சேவையை துவக்கி வைத்தார் அமைச்சர் மூர்த்தி
திருச்சியில் காவிரியில் ஐப்பசி துலா ஸ்நானம் செய்து பக்தர்கள் வழிபாடு
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்தார்.
சாலையில் மது போதையில் சண்டையிட்டுக் கொண்ட வெளிமாநிலப் பெண்கள்
கூகுள் மேப்பை பார்த்து சென்று சதுப்புநிலச் சேற்றில் சிக்கிய இளைஞர் மீட்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக எழுந்த கள்ளக்கடல் பேரலை

Advertisement
Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?

Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

அந்த மனசு தான் சார் “கடவுள்” உயிரை பணயம் வைத்து பத்திரமாய் மீட்ட வல்லவர்கள்..! மின்சாரம் தாக்கி குருக்கள் தப்பியது எப்படி ?

Posted Oct 17, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

மாமூல் ரவுடிகள் அட்டூழியம் கடைக்காரர் மண்டை உடைப்பு ஓசி சிகரெட் கேட்டு தாக்குதல்..! நீதி கேட்டு ஆளுநர் மாளிகை முற்றுகை

Posted Oct 14, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தமிழகத்தை உலுக்கிய 13 ஏகாதசி கொலைகள்..! வேட்டையனாய் துப்பறிந்த டி.எஸ்பி..! ஒரு நிஜ கிரைம் திரில்லர்

Posted Oct 12, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா?.. மனித தவறு விபத்துக்கு காரணமா?.. உயர்மட்டக்குழு தீவிர விசாரணை


Advertisement