செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் 90 கி.மீ.வேகத்தில் மோதிய எக்ஸ்பிரஸ் தடம் புரண்டன 6 பெட்டிகள்

Oct 12, 2024 11:26:40 AM

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 19 பேர் காயமடைந்தனர். எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தவர்கள் மாற்று ரயில்கள் மூலம் இன்று காலை அனுப்பிவைக்கப்பட்டனர்.

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவிற்கு நேற்று காலை 10:30 மணிக்கு பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இரவு 7.30 மணிக்கு சென்னை பெரம்பூருக்கு வந்த அந்த ரயில் ஆந்திரமாநிலம் கூடூரை நோக்கி சென்று கொண்டிருந்தது.

இரவு 8.30 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கவரைப்பேட்டையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில், 4 குளிர்சாதனப் பெட்டிகள் உள்பட 13பெட்டிகள் தடம் புரண்டன. சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தீப்பிடித்து எரிந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயைக் கட்டுப்படுத்தி அணைத்தனர்.

விபத்து குறித்து அறிந்ததும் திருவள்ளூர் மாவட்ட போலீசார் மற்றும் ஆவடியில் இருந்து தமிழக பேரிடர் மீட்புப் படையினரும், உள்ளூர்வாசிகளும் விரைந்து வந்து ரயில் பெட்டிகளுக்குள் சிக்கியவர்களை மீட்டனர்.

பயணிகளுக்குத் தேவையான வசதிகளை செய்து தருமாறு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில், அமைச்சர் நாசர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பயணிகளுக்கு உணவு மற்றும் தங்குமிடத்துக்கு ஏற்பாடு செய்தனர்.

ரயில் விபத்தில் காயமடைந்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களைப் பார்வையிட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை செய்துகொடுக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.

பிரதான தடத்தில் வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் அதே தடத்தில் செல்வதற்கு சரியாக சிக்னல் வழங்கப்பட்டிருந்த போதும் திடீரென லூப் லைனுக்கு மாறி அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியதாகவும், ரயில் தடம் மாறியதற்கு காரணம் என்ன என விசாரணை நடந்து வருவதாகவும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.

 


Advertisement
15 இரும்பு சத்து மாத்திரைகளை ஒரே நேரத்தில் உண்ட பள்ளி மாணவன்
கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் வழக்கறிஞர்கள் சாலை மறியல்
காரைக்குடி விமான நிலையத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவரக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த மதுரை உயர்நீதிமன்றம்
நெல்லை அ.தி.மு.க நிர்வாகிகளின் ஆதரவாளர்களிடையே கைகலப்பு
ஆற்றில் நீரெடுக்கும் தண்ணீர் தொட்டியில் உறங்கும் முதலை... முதலையைப் பிடித்து செல்ல வனத்துறையிடம் கோரிக்கை
மண்டல அளவிலான உயர்கல்வித்துறை பங்களிப்போர் கலந்தாய்வு கூட்டம்
நடிகை சீதா வீட்டில் நகை திருடு போன விவகாரம் குறித்து போலீசார் விசாரணை
நேற்று பெய்த கனமழையால் திருச்செந்தூரில் வீடுகளில் புகுந்த மழைநீர் மின் மோட்டார் மூலம் மழைநீர் வெளியேற்றம்
வயல் வெளியில் உலாவிய முதலை மீட்பு - வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு தகவல் கொடுத்த மக்கள்..
2 நாட்களாக , வீட்டில் மயங்கி கிடந்த மூதாட்டி - மீட்ட தீயணைப்பு வீரர்கள்

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement