சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக கூறப்படும் வீடியோ அவரது பரம்பொருள் பவுண்டேஷன் என்ற யூடியூப் சேனலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, அசோக் நகர் அரசுப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் பலர் மகாவிஷ்ணு மீது புகார் அளித்து வரும் நிலையில், போலீசாரின் அறிவுரையின்படி பரம்பொருள் ஃபவுன்டேஷன் நிர்வாகத்தினரே வீடியோவை நீக்கியதாக கூறப்படுகிறது.