தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள மருதடியூர் பகுதியில் திருமண நிச்சயதார்த்த விழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சாக்கு தைக்கும் தொழிலாளியை வெட்ட முயன்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
அதே பகுதியை சேர்ந்த இளைஞர் கலைச்செல்வன் அரிவாளுடன் வெட்ட வருவதை கண்டு சுதாரித்துக் கொண்ட தொழிலாளி கணேஷ், தனது இரு குழந்தைகளையும் வீட்டினுள் அழைத்து சென்று உயிர் தப்பினார்.
அங்கு இருந்த கணேஷின் தாயாருக்கு மிரட்டல் விடுத்த கலைச்செல்வன், பைக்கை சேதப்படுத்தியுள்ளார். இதுகுறித்து கணேஷ் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி பதிவை கைப்பற்றிய போலீசார், தலைமறைவான கலைச்செல்வனை தேடி வருகின்றனர்.