செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

“வேணாம்மா இந்த காதல் ” காருடன் சாலையில் தர.. தரவென இழுத்துச்செல்லப்பட்ட பெண்..! மகளை மீட்க தாயின் பாசப்போராட்டம்

Sep 06, 2024 09:57:18 AM

கோவை கருமத்தம்பட்டியில் தாயுடன் வீட்டுக்கு செல்வதாக கூறி தனியார் மில்லில் இருந்து வெளியே வந்த இளம் பெண் ஒருவர், காதலன் கொண்டு வந்த காரில் ஏறி தப்பிச் செல்ல முயன்றார். அப்போது மகளின் தலைமுடியை எட்டிப் பிடித்து தடுக்க முயன்ற தாயையும் காருடன் சேர்த்து சாலையில் இழுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தன்னை விட்டு காதலனின் காரில் ஏறிச்சென்ற மகளை பிடித்துக் கொண்டு “இந்த காதல் வேணாங்கண்ணு.. வீட்டுக்கு வந்துவிடு” என்று தாய் மன்றாட... காதலன் மற்றும் கூட்டாளிகளை மக்கள் மடக்கிப்பிடித்த காட்சிகள் தான் இவை..!

கோவை மாவட்டம் அரசூர் தென்னம்பாளையத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் தங்கி பணிபுரிந்து வந்த இளம் பெண் ஒருவர், சம்பவத்தன்று தாயுடன் ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு கருமத்தம் பட்டிக்கு ஆட்டோவில் வந்து இறங்கினார். அடுத்த சில நிமிடங்களில் அங்கு நின்ற காரில் ஓடிச்சென்று ஏறினார். அவரை விரட்டிச்சென்ற தாய் , தனது மகளை எட்டிப்பிடிக்க , இதனை கண்டுகொள்ளாத கார் ஓட்டுனர் காரை வேகமாக கிளப்பிக்கொண்டு சென்றார். இதனால் அந்த இளம் பெண்ணின் தாய் சாலையில் தர தரவென இழுத்துச்செல்லப்பட்டதால் அப்பகுதி மக்கள் அந்த காரை மடக்கிப்பிடித்தனர்.

அதற்குள்ளாக காரில் இருந்து இறங்கிய கருப்பு சட்டை அணிந்த இருவர் அந்த பெண்ணின் தாயை கையை எடுக்கும்படி மிரட்டிக் கொண்டிருந்தனர். தவித்து நின்ற தாய்க்கு ஆதரவாக அப்பகுதி ஆட்டோ ஓடுனர்கள் களமிறங்கினர்

“காதல்ன்னா இப்படித்தான் பெண்ண கடத்திட்டு போவீங்களா”..? எனக்கேட்டு முற்றுகையிட்ட மக்கள் அவர்களை காவல் நிலையம் வருமாறு அழைத்தனர். திமிறிய இளைஞரை தட்டி விலகிபோக செய்தனர்

அந்த இளைஞர்களை அங்கிருந்து தப்ப விடாமல் மக்கள் மடக்கிய நிலையில் காரில் இருந்து இறங்கிய இளம்பெண்ணோ, அந்த இளைஞர்களை கட்டிப்பிடித்தபடி நின்றிருந்தார்

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அந்த இளம் பெண்ணை தங்கள் இரு சக்கர வாகனத்தில் ஏற்றி கருமத்தம்பட்டி காவல் நிலையம் அழைத்துச்சென்றனர்.

விசாரணையில் பட்டுக்கோட்டையை சேர்ந்த அந்தப்பெண், சமூகவலைதளம் மூலம் செல்போன் சாட்டிங்கில் அறிமுகமான மதுக்கரையை சேர்ந்த டேனியல் என்ற இளைஞரை ஒன்றரை வருடங்களாக காதலித்ததாகவும், விபரம் தெரிந்து பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது. பெண்ணை தனது ஊருக்கு அழைத்துச்செல்ல வந்த நிலையில், முன் கூட்டியே காதலனுக்கு செல்போன் மூலம் தகவல் சொன்ன அந்த இளம் பெண் காதலனுடன் காரில் தப்பிச்செல்ல முயன்ற போது சிக்கிக் கொண்டது தெரியவந்தது.

இளைஞர்கள் காரில் இழுத்துச் சென்றதில் காலில் ரத்தகாயம் ஏற்பட்டதால், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக காரை இயக்கியதாக அந்த இளைஞர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனால் இளம்பெண்ணை அவர்களுடன் அனுப்ப போலீசார் மறுத்து விட்டனர், தாயுடன் செல்ல இளம் பெண் மறுத்து அடம்பிடித்ததால் முடிவில் அவரை போலீசார் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.


Advertisement
"சரக்குகளை ஏற்றி இறக்குவதில் பிரச்சனை" மாட்டுவண்டி ஓட்டுநர்களுக்கும் சுமைதூக்கும் தொழிலாளிகளுக்கும் இடையே கைகலப்பு
"போதிய பேருந்து வசதி இல்லை" திருவண்ணாமலை கிரிவலம் சென்ற பக்தர்கள் சாலை மறியல்
கேரளாவில் நிஃபா வைரஸ் பாதித்து ஒருவர் உயிரிழந்த நிலையில்... கேரள - தமிழக எல்லைகளில் தீவிர சோதனை
திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில் திடீரென கழன்ற கடைசி 3 பெட்டிகள்
தஞ்சை பெரிய கோயிலில் 8 ஆண்டுகளுக்கு பிறகு சுமார் 3 கி.மீ. அளவுள்ள கிரிவலப்பாதை திறப்பு
செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...
தருமபுரில் புதிய டாஸ்மாக் மதுக்கடையை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு
மதுரை, திண்டுக்கல், சமயநல்லூரில் ரயில்வே பராமரிப்பு பணிகள் அக்.8 வரை நடைபெறும்: மதுரை ரயில்வே கோட்டம்
மயிலாடுதுறையில் மின் மோட்டார்களைத் திருடிய 3 பேர் கைது
திருச்செந்தூரில் பௌர்ணமி இரவில் 500 மீட்டர் தூரத்துக்கு உள்வாங்கிய கடல்

Advertisement
Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...

Posted Sep 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெரியாருக்கு விஜய் 'முதல் மரியாதை'.. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து இல்லை.. விஜயின் அரசியல் பாதை என்ன?

Posted Sep 16, 2024 in தமிழ்நாடு,Big Stories,

கார் சாவியை பறித்து பறந்த கே.டி.எம் பைக்கர்ஸ் விரட்டி பிடித்த பொதுமக்கள்..! கொல்லிமலை ட்ரிப் வேதனைகள்


Advertisement