திருப்பூரிலிருந்து பெருமாநல்லூர் செல்லும் அரசுப்பேருந்தின் டிரைவர் நீண்டநேரமாக செல்போனில் பேசியவாறு, பேருந்தை இயக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
101 என்ற வழித்தட எண் கொண்ட அந்தப் பேருந்தின் டிரைவர் பொறுப்பின்றி பேருந்தை இயக்கிய நிலையில், இவரைப் போன்ற டிரைவர்களுக்கு அரசு போக்குவரத்துத் துறை உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.