பொத்தேரி தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கி இருந்த வீடுகள், விடுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் சுமார் 4 மணி நேரம் நடத்திய சோதனையில் கஞ்சா, கஞ்சா சாக்லேட்கள், கஞ்சா ஆயில், கஞ்சா புகைக்க பயன்படும் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக 21 மாணவர்களை கைது செய்து, 60 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டதாக மறைமலைநகர் காவல்நிலைய போலீசார் கூறினர். மேலும், கஞ்சா விநியோகித்த நந்திவரம் கூடுவாஞ்சேரியை சேர்ந்த A+ ரவுடி செல்வமணி என்பவரையும் கைது செய்து, அவரிடம் இருந்த மூன்று கிலோ கஞ்சா, நான்கு பட்டாக்கத்திகளை பறிமுதல் செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.