சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தேவூர் கிராமத்திலுள்ள சரபங்கா தடுப்பணையையொட்டி பாலம் அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சரபங்கா தடுப்பணை நிரம்பி தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. இந்த தடுப்பணையைக் கடந்துதான் மயிலாம்பட்டியிலிருந்து பெண்கள், முதியவர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் பெரமச்சிப்பாளையம் சென்று வருவதாகவும் எனவே பாலம் அமைத்துத் தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.