திருச்செந்தூர் கடற்கரையில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியதால் கடலில் குளித்த ஒரு சிலருக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டது.
அவர்களுக்கு கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முதலுதவி மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மனிதர்களின் உடலில் ஜெல்லி மீன்களால் பட்டால் அரிப்பு ஏற்படுவதோடு தோல் நோய் ஏற்படும் அபாயமும் உள்ளதால் பாதுகாப்பாக குளிக்க போலீஸார் அறிவுறுத்தினர்.