பொள்ளாச்சியை அடுத்த தாத்தூரில் கணவனுடனான தகராறில் தனது இரண்டு குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆனைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
கூலித்தொழிலாளியான தனது கணவர் அருண்குமார், தன்னுடன் தினமும் தகராறில் ஈடுபட்டு வந்ததால் மனமுடைந்த மனைவி சுகன்யா 7 வயது மகள் தனுஸ்ரீ, 4 வயது மகன் அகிலனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மூவரின் சடலங்களை மீட்ட போலீசார் கணவர் அருண்குமாரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.