திருவாரூரில் கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த முக்கிய குற்றவாளியான ரவுடி மாதவன் என்பவர் தனிப்படை போலீசாரை கண்டதும் ரயில்வே மேம்பாலத்தின் வழியே தப்பிச்செல்ல முற்பட்டு பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் அவரது வலது கை மற்றும் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
களப்பால் கிராமத்தில் கடந்த 9ஆம் தேதி, முன்விரோதம் காரணமாக மாரிமுத்து என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒரு பெண் உட்பட 11 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர்.