வெளிநாடுகளுக்கு கப்பல் மூலமாக தீப்பெட்டிகளை எடுத்துச் செல்ல கண்டெய்னர்களின் வாடகை பல மடங்கு உயர்ந்துள்ளதால் ஆப்ரிக்கா நாடுகளுக்கு தீப்பெட்டி ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
16 லட்சம் ரூபாய் மதிப்பிலான தீப்பெட்டி பண்டலை எடுத்துச் செல்வதற்கு வசூலிக்கப்பட்டு வந்த வாடகை 2 லட்சத்திலிருந்து 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். கண்டெய்னர்களை ஏற்றிச்செல்லும் கப்பல் பயணிக்கும் சில நாடுகள் உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ளதால், வேறு வழித்தடத்தில் செல்வதே வாடகை உயர்வுக்கு காரணம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.