தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காட்டுப்பன்றி வேட்டைக்காக மாட்டுக்கொழுப்பு தடவப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை தோப்பில் வீசிய இளைஞர் கைது செய்யப்பட்டார். இரவு நேரத்தில் காட்டுப்பகுதியில் திரிந்த இளைஞர்கள் 2 பேரை கிராம காவல் குழுவினர் பிடித்த போது அவர்களில் ஒருவர் தப்பியோடினார்.
விசாரணையில், கடித்தால் வெடிக்கும் வகையில் கொழுப்பிற்குள் நாட்டு வெடிகுண்டுகளை மறைத்து வீசியதாக கூறவே அவரை போலீஸில் ஒப்படைத்தனர். 29 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றிய போலீஸார் தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.