கடலூர் மாவட்டம் நடுக்குப்பம் கிராமத்தில், தேமுதிக கொடி கம்பத்தை நடும்போது மின்சாரம் தாக்கி அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் உயிரிழந்தார். வெங்கடேசன் என்பவர், விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு தேமுதிக கொடி கம்பத்தை நட முயன்றபோது, மேலே சென்ற உயர் அழுந்த மின் கம்பி, கொடி கம்பத்தில் உரசியதால் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். வெங்கடேசனை காப்பாற்ற முயன்ற 5 பேர், மின்சாரம் தாக்கி காயமடைந்தனர்.