திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அருகே தனியார் பேருந்துடன் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு வந்த வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வேன் ஓட்டுநர் உயிரிழந்தார்.
காஞ்சிபுரத்திலிருந்து வெம்பாக்கம் வழியாக செய்யாறு நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது, தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிக் கொண்டு திருப்புனமூர் கிராம பிரிவு சாலையிலிருந்து திரும்பிய வேன் வேகமாக மோதியதாக கூறப்படுகிறது.
வேன் ஓட்டுநர் உயிரிழந்த நிலையில், பேருந்து மற்றும் வேனில் பயணித்த 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்து குறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.