புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெறப்பட்ட 2,89,591 விண்ணப்பங்களில் 1,63,458 விண்ணப்பங்கள் மீது களவிசாரணை மேற்கொள்ளப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்ட 92,650 விண்ணப்பங்களில் 24,657 விண்ணப்பங்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதர விண்ணப்பங்களுக்கும் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிடப்பட்டுவரும் நிலையில், நிலுவையில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் விரைந்து வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளர்.