நாகப்பட்டினத்தில் அனுமதியில்லாமல் நடப்பட்ட தங்கள் கட்சிக் கொடிக்கம்பம் அகற்றப்பட்டதை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எம்.எல்.ஏ ஆளுர் ஷானவாஸ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட போது போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கன்னி அடுத்த காமேஷ்வரம் கிராமத்தில் விசிக சார்பாக அனுமதி இல்லாமல் நடப்பட்ட 62 அடி கொடி கம்பத்தை கீழ்வேளூர் வட்டாட்சியர் ரமேஷ் தலைமையிலான காவல்துறையினர் இரவோடு இரவாக அப்புறப்படுத்தினர்.
இதனை கண்டித்து நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் தலைமையில் விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையினரின் தடுப்புகளை தள்ளிக்கொண்டு போலீசாரை மீறி ஆட்சியர் அலுவலக கதவை திறந்து உள்ளே நுழைய முயன்ற விசிகவினர் தடுத்து நிறுத்தப்பட்டனர்
போலீசார் மீது தடுப்பை தூக்கி எறிந்த விசிகவினரை காவலர்கள் தடுத்து தள்ளிவிட்டதால் காவல்துறையினருடன் பயங்கர தள்ளுமுள்ளும் , வாக்குவாதமும் ஏற்பட்டது.
"எம்.எல்.ஏவுடன் வந்த நிலையில் எப்படி தங்களை தள்ளி நசுக்கலாம்" என்றும் மரியாதை குறைவாக நடத்தியதாகவும் கூறி வாக்குவாதம் செய்தனர்
ஏராளமானோர் வருவார்கள் என எதிர்பார்த்து நாகை, திருவாரூர், அரியலூர் என 3 மாவட்ட போலீசார் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.