பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், போதைப்பொருள் புழக்கம் போன்றவற்றை ஒடுக்க மிகக் கடுமையான சட்டங்களைக் கொண்டு வரவேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னையில் அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை கிடைக்க விரைவு சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.