திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நபரை போலீசார் கைது செய்தனர். குட்டூர் பகுதியை சேர்ந்த எம்.கே.ராஜா என்பவர் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி, நண்பர்களுடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அந்த போட்டோக்கள் ரீல்ஸ்ஆக சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளனர்.