ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசு தலைமை மருத்துவமனையில் போதிய அளவில் மருத்துவர்கள் இல்லாததால், நோயாளிகள் கடும் அவதியுற்று வருவதாக உடன்வந்த உறவினர்கள் வேதனை தெரிவித்தனர். 5க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டிய நிலையில், பரமக்குடியிலிருந்து பொறுப்பு மருத்துவர்களாக பணியாற்றி வரும் இரண்டு மருத்துவர்களும் காலதாமதமாக வருவதாகவும், நன்பகல் 12 மணி வரை மட்டுமே பணியாற்றுவதாகவும் புகார் எழுந்துள்ளது.