திருவண்ணாமலை மாவட்டம், மோட்டூர் மலைகிராமத்தில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு சிறுவர்களில் ஒரு சிறுவனின் உடல் கரை ஒதுங்கிய நிலையில், மற்றொரு சிறுவனை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.
ஜவ்வாது மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் குப்பநத்தம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மோட்டூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜின் 5 வயது மகன் கதிரேசன் மற்றும் 4 வயது மகன் அகிலேஸ்வரன் ஆகியோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அகிலேஸ்வரன் உடல் குப்பநத்தம் பகுதியில் உடல் கரை ஒதுங்கியுள்ளது.