அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றிய ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் மானாவாரி மக்காச்சோள விரிவாக்க திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய சிறப்பு தொகுப்பு வழங்குவதற்காக 540 ரூபாய் கூடுதலாகவும், பல்வேறு இடுப்பொருட்கள், விதைகள் உள்ளிட்டவை வழங்க விவசாயிகளிடம் லஞ்சம் பெற்றதும் தெரியவந்ததாக போலீசார் கூறினர்.
இவர், கடந்த சுதந்திர தினத்தன்று சிறப்பாக பணியாற்றியதற்கான நற்சான்றிதழை மாவட்ட ஆட்சியரிடம் பெற்றார்.