செங்கல்பட்டு மாவட்டம் வல்லம் பகுதியில் கஞ்சா விற்றதாக கூறி, அருண், மணிகண்டன் ஆகிய இரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
தங்களை பார்த்ததும் பாழடைந்த பங்களா ஒன்றின் சுவர் ஏறி குதித்து இருவரும் தப்பி ஓட முயன்றதாகவும், அப்போது பாறையில் விழுந்து இருவருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருவருக்கும் மாவு கட்டு போடப்பட்டது.