கோவில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடத்துவது குறித்த தமிழக அரசின் கொள்கை முடிவை அடுத்த மாதம் 9ந் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பேரிடரால் 2021ஆம் ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட யானைகள் முகாம் அதன் பிறகு நடத்தப்படவில்லை எனக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது 'புத்துணர்வு முகாமிற்கு வாகனங்களில் யானைகளை அழைத்து வருவதில் நடைமுறை சிரமங்கள் உள்ளதாகவும் கோவில்களிலேயே யானைகளுக்குக் குளியல் தொட்டி, ஷவர்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.