பரமக்குடி அருகே விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவுக்கு சென்ற அமைச்சருடன் ஒன்றாக நடப்பது யார் ? என்று திமுகவினர், கைகலப்பில் ஈடுபட்ட நிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பனை பாதுகாப்பு போலீசார் பத்திரமாக அழைத்துசென்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கான விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் ராஜகண்ணப்பன் காரில் இருந்து இறங்கி கட்சியினருடன் சேர்ந்து நடந்தார்.
அமைச்சருடன், ராமநாதபுரம் எம்.எல்.ஏ காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், மூத்த மற்றும் இளம் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் நடந்து வந்த போது அமைச்சருடன் இணையாக நடந்து வருவது யார் ? என்று இருதரப்புக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது
அமைச்சரிடம் நெருங்கவிடாமல் தடுத்த சீனியர்களை , ஜூனியர் திமுகவினர் தாக்கியதால் , பாதுகாப்பு போலீசார் அமைச்சர் ராஜகண்ணப்பனை பத்திரமாக அங்கிருந்து அழைத்துச்சென்றனர்
திமுகவின் தொண்டர்கள், ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டதால் போலீசார் கூட்டத்திற்குள் புகுந்து சமாதானப்படுத்தினர்.