திருநெல்வேலி மாநகராட்சி மேயர் வேட்பாளராக தி.மு.க கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணனை அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் அறிவித்துள்ளனர்.
நெல்லை மேயராக இருந்த பி.எம்.சரவணன், பதவியை ராஜினாமா செய்த நிலையில், நாளை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் கவுன்சிலர்களிடம் ஒருமித்த கருத்து ஏற்படுத்துவதற்காக அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாநகராட்சியின் 25 வது வார்டு உறுப்பினரான ராமகிருஷ்ணனை மேயர் வேட்பாளராக மேடையில் அறிமுகம் செய்யப்பட்டார்.