காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மிலிட்டரி ரோடு பகுதியில் வளர்ப்பு மீன்கள் கடைக்கு புகுந்து சப் இன்ஸ்பெக்டர் தம்பதியின் மகன் ஒருவர், தனது நண்பருடன் சேர்ந்து மதுபோதையில் பெண் உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தியது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அரக்கோணத்தை சேர்ந்த சோசமா வர்கீஸ் என்பவரின் கடைக்குச் சென்ற 2 பேர், மீன் தொட்டியில் இருந்த மீன்களை வலை போட்டு எடுக்காமல் நேரடியாக கையில் எடுத்ததாகவும், அதை கேட்டபோது கண்மூடித்தனமாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
தாக்குதலில் ஈடுபட்ட நபரின் தாய், தந்தை இருவருமே சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருவது தெரியவந்தது. இதையடுத்து தாலுகா போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.